‘வாரிசு’ ஆடியோ லாஞ்சுக்கு போன விஜய் ரசிகரை தாக்கும் பவுன்சர்கள்..! தள்ளு முள்ளால் தடுக்கி விழுந்த போலீசார்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!

Author: Vignesh
26 December 2022, 1:00 pm

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அஜித்குமாரின் துணிவு படத்துடன் மோதுகிறது. இதனால், அஜித், விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, இரு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களால் இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.

இதில், ஒருபடி மேலே சென்று வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய் மாஸான என்ட்ரி கொடுத்தார்.

மேலும், அவரது பேச்சுக்கு விழா அரங்கமே அதிர்ந்து போனது. இந்த விழா அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்களை கட்டுப்படுத்த சில மோதல்களும் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழாவின் போது, ரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் வாரிசு பாட இசை வெளியிட்டு விழாவை காண ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக அங்கு கூட தொடங்கினர். பலருக்கும் அனுமதி சீட்டு கிடைக்காமல் அங்கு வெளியில் கால் வலிக்க காத்துக்கொண்டிருந்த நிலையில், அரங்கத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் நுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Vijay - Updatenews360

40ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த அரங்கம் ஏற்கனவே நிரம்பி வழிந்து கொண்டிருந்த நிலையில் நுழைவு சீட்டு இல்லாதவர்கள் உள்ளே நுழைவதற்கு எண்ணி வாசலில் இருந்த போலீசாரை வெறி கொண்டு முட்டி தள்ளிக்கொண்டு அரங்கத்திற்குள் செல்ல முயன்ற நிலையில் உடனடியாக சுதாரித்து கொண்ட போலீசார் அரங்கத்தின் கேட்டை பூட்டினர்.

இதனால் அங்குள்ளவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு, போலீசாரை கீழே தள்ளி ஏறி மிதித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அதோடு பேனர்களை கிழித்தது, கேட்டுகளை எட்டி உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த போலீசாருக்கு காயங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் லேசான தடியடியில் ஈடுபட்டு அங்குள்ளவர்களை விரட்டி அடித்தனர்.

போலீசாரின் அடிக்கு பயந்து அங்குள்ள ரசிகர்கள் அக்கம் பக்கத்திலிருந்த தெருக்களில் அடைக்கலம் புகுந்த நிலையில் அந்த இடத்தில செருப்புகள் சிதறி கடந்தது. இப்படியிருக்கும் போது அங்கு ஒரு பள்ளி மாணவன் கையில் அனுமதி சீட்டுடன் வந்து அங்குள்ள தலைமை போலீசாரிடம் ‘சார் பாஸ் இருக்கு’ என்று கேட்க கோவத்தில் இருந்த போலீசார் அந்த சிறுவனை அடிக்காத குறையாக ‘டேய் போடா மயிறு’ என்று திட்டி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மேலும், இதே நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவரை பாதுகாவரலர்கள் அடித்து உதைத்த வீடியோவும் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் விஜய் வந்த போது ரசிகர் ஒருவர் விஜய்க்கு அருகில் சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை பிடித்து தள்ளி வெளியில் கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள். பவுன்சர்கள் விஜய் ரசிகரை தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?