தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியின் மகள் லீரா (16) நேற்று விடியற்காலை 3 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மகள் லீரா பள்ளியில் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று காலை இறுதி சடங்குகள் முடிந்த பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போது விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் என கேட்க, அதற்கு அவர் பல மணி நேரமாக அவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவர் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை என டுவிட் செய்துள்ளார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.