பெண் ஒளிப்பதிவாளரிடம் வரம்பு மீறிய மிஸ்கின்.. கடுப்பான தாணு..!

Author: Vignesh
9 January 2024, 1:33 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் பல வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர். அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுத்துப்பதில் திறமைமிக்கவர் இயக்குனர் மிஸ்கின்.

mysskin - updatenews360

இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்ற மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர், எதார்த்தமான பேய் படங்களையும் திரில்லர் படங்களையும் எடுத்து பிரபலமானவர். மிஸ்கின் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். எப்போதும் மிஸ்கின் விழாக்களின் மேடையில் பேசும் போது சில சர்ச்சை கருத்துக்களோடு பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

mysskin

இந்நிலையில், ட்ரைன் படத்தின் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் பவுசியா பாத்திமாவை ஒளிப்பதிவு செய்யவிடாமல் அவரிடமிருந்து கேமராவை எடுத்துக்கொண்டு இயக்குனர் மிஸ்கின் ஒளிப்பதிவு செய்ய துவங்கினாராம். ஒளிப்பதிவு செய்ய வந்த பவுசியா பாத்திமாவை ஓரமாக நிற்க வைத்து விட்டாராம். இதனால், கடுப்பான தயாரிப்பாளர் தாணு ஒழிப்பதிவு செய்வதற்காக நான் 25 லட்சம் சம்பளமாக கொடுத்து பவுசியா பார்த்திமாவை இப்படத்திற்கு கமிட் செய்திருக்கிறேன். அவர்களை ஒளிப்பதிவு பண்ண விடுங்க என மிஸ்கினிடம் தாணு கடுப்பாக கூறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தற்போது பகிர்ந்து உள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 407

    0

    0