கெத்து காட்டி கெட்டுப்போகும் கவின்.. எழுந்த புகார், வருத்தத்தில் ரசிகர்கள்..!
Author: Vignesh9 March 2024, 12:02 pm
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார். அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். அதனால் அவரை ரூ. 1 கோடிக்கு கமிட் செய்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியனது. ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தும் வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கவின் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது குறித்து மறுக்கப்பட்டுள்ளது. தற்போது, கவின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உங்கிட்ட வர மாட்டேன் என்று ஒரு கும்பிடு போட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின் பிரபல இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் இருக்கும் படத்திலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறாராம். மேலும், சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் கவின் செயல் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தகுந்த நடிகராக கவின் இல்லை எனவும், எப்போதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக தான் வருகிறார்.
அப்படி வந்தாலும், அவரது கேரவேனிலேயே, நீண்ட நேரம் இருக்கிறார். சரியான நேரத்திற்கு ஷூட்டிற்கு வருவது கிடையாது. அவர் சரியாக வராமல் இருப்பதால் மற்ற நடிகர்களின் காட்சியை படமாக்கிவிட்டு அவருக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியான அணுகுமுறை சரியில்லை என பதிவு செய்து வருகின்றனர்.