நீங்க பண்ணது எல்லாமே வெளியில வரும்.. ரக்ஷிதாவுக்கு மிரட்டல் விடுத்து X தளத்தில் பதிவு செய்த பிரபலம்..!

Author: Vignesh
13 July 2024, 6:09 pm

பாலாஜி முருகதாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி ஆகியோர் நடிப்பில் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபயர் அண்மையில் பாலாஜி முருகதாஸ் சோசியல் மீடியா பக்கத்தில் இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கிடைக்கவில்லை. சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இவரது பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், இதற்கு ரக்ஷிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நான் இந்த ஏமாற்று இடத்திலிருந்து முன்பே வெளிவந்துவிட்டேன். உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. நீங்கள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனராக இருக்கலாம். ஆனால், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்க வேண்டாம்.

rachitha-mahalakshmi

நீங்கள் தயாரிப்பாளராக இருக்க அருகதை அற்றவர் என்று பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், ரக்ஷிதாவின் குற்றச்சாட்டுக்கு எதிராக தயாரிப்பாளர் சதீஷ் தனது எக்ஸ் தளத்தில் உங்க பர்த்டேக்கு நீங்க நடிச்சதை தான் கிலிம்ஸா போட்டு இருக்கேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல, இன்னும் படம் வெளியில வரும்போது நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில வரும்.

Rachitha-updatenews360-1

நீங்க சம்பளம் வாங்கிட்டு தான் நடிச்சிருக்கீங்க, இனாமா நடிச்சு கொடுக்கல அதுக்கு அக்ரீமெண்ட் என் கையில இருக்கு, நீங்க பணம் வாங்குனதுக்கு ஆதாரமும் என் கையில இருக்கு, அதனால உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆயிரும். மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னைச் சுடும். குருவே சரணம் ஃபயர் திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள். அதே படத்தை ‘Shit’ என்று விமர்சனம் செய்துள்ளீர்கள். அந்த ‘Shit’ டில் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று சதீஷ் பதிவு செய்திருந்தார். அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!