தொடர்ந்து ப்ளாப் படங்கள்..! அப்புறம் விஜய் எப்படி நம்பர் 1-ஆ இருக்க முடியும்?… ஒரு படம் நடித்த அந்த இளம் நடிகரே சூப்பர் : தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்..!

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர்.

விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதை அடுத்து துணிவு படத்தின் பாடல்கள் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததோடு துணிவு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் போர் இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் இரு படங்களின் பாடல்களும் நன்றாகவே இருக்கிறது என்பது தான் உண்மை
இதற்கிடையே வாரிசு படத்தின் விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பற்ற வைத்தார். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்றவைத்தது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார் சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி. இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர், “தற்போதைய சூழலில் வசூல் ரீதியாக பார்க்கும்போது விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மக்கள் விஜய் அந்த இடத்தில் எப்போது வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். மேலும் ரஜினி என்ன என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் பிஸ்மிக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : “கடின உழைப்பின் மூலமும், பல வெற்றி படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரஜினிகாந்த் என்றும், பல தயாரிப்பாளர்களை காப்பாற்றியதால் தான் அவர் சூப்பர் ஸ்டார் ஆனர். அவர் படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்தவர்கள் என எடுத்து பார்த்தால் 2 சதவீதம் கூட கிடையாது எனவும், அப்படி நஷ்டம் ஆனாலும், அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து ரஜினி உதவுவார். இப்படிப்பட்ட தாராள எண்ணம் கொண்டவராக இருப்பதனால் தான் அவரை மக்கள் சூப்பர் ஸ்டார் என ஏற்றுக் கொண்டார்கள் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும், அவர் பேசுகையில், இருக்கும்போதே, இன்னொருவரை சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்றும், அதற்கு சமமாக வேறு எந்த பெயரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், சரத்குமாரை சுப்ரிம் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இன்றும் அவர் சுப்ரிம் ஸ்டார் தான். அப்படி இருக்கையில் அவர் எப்படி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம்? விஜய் முன் அவரை புகழ்வது தப்பில்லை. ஆனால், அதற்கு சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்ததை தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யை நம்பர் 1 என்று சொன்னால், அவர் நடித்த எல்லா படமும் ஓடியிருக்கணுமே? தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் – அஜித் இருவரும் சமமானவர்கள் தான். பிகில், வலிமை, விவேகம், மெர்சல் போன்ற படங்கள் தோல்வியடைந்த பிறகும் கூட குறிப்பாக மெர்சல் படத்தை எடுத்த தயாரிப்பாளரால் அதன்பின் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை என்றும், அப்புறம் எப்படி நீ நம்பர் 1-ஆ இருக்க முடியும்?

எப்போதுமே படம் தான் நம்பரை தேர்வு செய்யும் என்றும், பிரதீப் ரங்கநாதன் 6 கோடியில் லவ் டுடே படத்தை எடுத்து அதன்மூலம் 100 கோடி வருவாய் எடுத்திருக்கிறான் என்றால் அவன் தான் இப்போதைக்கு நம்பர் 1” என அந்த பேட்டியில் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

12 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

13 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

14 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

14 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

15 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

15 hours ago

This website uses cookies.