உனக்கு இருக்குற தகுதிக்கு இத பண்ணா விஜய் அரசியலில் தலைகாட்ட முடியாது? அஜித்தை சீண்டிய பிரபலம்!

Author: Rajesh
2 February 2024, 2:52 pm

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் தொடர்ந்து விஜய் – அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.

ajith-updatenews360

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே. ஆனால், அஜித் விஜய் அப்படி பெரிசாக போட்டி போடுவதாக தெரியவில்லை.

அஜித் படங்களில் நடிப்பதோடு சரி அவருக்கு அரசியல் ஆசை இல்லை, மக்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசை இல்லை, வீடு உண்டு, வேலை உண்டு , அப்புறம் மோட்டார் பைக் உண்டு என அதிலே மகிழ்ச்சியாக, அடக்கமாக இருக்கிறார். அது அவரது கேரக்டர். அதை நாம் குறை சொல்லவே முடியாது.

Actor vijay

ஆனால், விஜய் அப்படி இல்லை, அவருக்கு அரசியல் ஆசை அதிகம் ஆகிடுச்சு. அதற்கான அதிக பணம் தேவைப்படுவதால் அடுத்தடுத்த படங்களில் கேப் விடாமல் நடித்துவிட்டு இடையில் அரசியல் வேளைகளில் மும்முரம் காட்டுகிறார்.

இதில் விஷயம் என்னவென்றால் அஜித்திற்கு உள்ள தகுதிக்கு வெளியில் வந்து மக்களை சந்தித்தால், ஏழைகளுக்கு இன்னும் அதிமாக உதவினால் அடுத்த எம்ஜிஆர் நீங்க தான். அந்த தகுதி உங்களுக்கு நிறைவே உள்ளது.

k rajan_updatenews360

காரணம் அவர் பெயரில் ஒரு controversy கூட இல்லை. அவர் குடும்பத்தை பற்றி ஏதேனும் தவறான செய்தி வந்துள்ளதா? பெற்றோர்களை அவ்வளவு அற்புதாக பார்த்துக்கொள்ளும் அருமையான மகன், பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன். அதனால் அஜித் அரசியலுக்கு தகுதியானவர் என பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 470

    0

    0