எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?

Author: Prasad
23 April 2025, 7:39 pm

சுமாரான நடிகர்

நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை விமர்சிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அது மட்டுமல்லாது தொடக்க காலகட்டத்தில் பல சுமாரான திரைப்படங்களில் சூர்யா நடித்திருந்தார். அந்த வகையில் அவர் நடித்த மிகவும் சுமாரான திரைப்படம்தான் “உயிரிலே கலந்தது”. 

producer lose his money because of suriya film

இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை கே.ஆர்.ஜெயா என்பவர் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராதிகா, சிவக்குமார், ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தொலைக்காட்சிகளில் இப்போதும் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இக்கால ரசிகர்கள் இத்திரைப்படத்தை ரசித்து பார்த்தாலும் இத்திரைப்படம் வெளிவந்தபோது பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.

எல்லாமே போச்சு

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான Mutham சிவகுமார் இத்திரைப்படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை குறித்து மிகவும் மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டார். அதாவது இத்திரைப்படத்தின் தோல்வியால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிட்டதாம். 

producer lose his money because of suriya film

அவரது மனைவியின் நகைகளை விற்று பிழைப்பு நடத்தினாராம். அது மட்டுமல்லாது எங்காவது வேலை கிடைக்கும் என்று பல இடங்களில் முயன்றுபார்த்தும் வேலை எதுவும் கிடைக்கவில்லையாம். அதன் பிறகு வாழ்க்கையே போராட்டமாகிவிட்டதாம். எனினும் ஒரு கட்டத்திற்கு பிறகு நிலைமை ஓரளவு சரியானதாம். இவ்வாறு தான் பட்ட கஷ்டத்தை அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் Mutham சிவகுமார். 

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?
  • Leave a Reply