ஷூட்டிங்கில் அந்த மாதிரி நடந்து கொண்ட சிம்பு, நயன்… வெளு வெளுன்னு வெளுத்துவிட்ட பிரபலம்..!

Author: Vignesh
4 April 2023, 10:38 am

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் நயன், விக்னேஷ் சிவனை காதலித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். நயன் தாரா, விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன் வல்லவன் படத்தின் போது நடிகர் சிம்புவை காதலித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதனையடுத்து, சில படங்களில் ஒன்றாக நடித்து வந்த சிம்பு – நயன், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், எப்போதும் சிம்பு தான் நடிகைகளிடம் சில்மிஷம் செய்வார் என்று கூறுவார்கள். ஆனால், நயன், சிம்பு இருவரும் ஒரு சில்மிஷத்தை செய்துள்ள சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.

வல்லவன் படத்திற்கு பிறகு, மீண்டும் சிம்புவும் நயனும் இணைந்த திரைப்படம் ‘இது நம்ம ஆளு’.

simbu nayan-updatenews360

பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இத்திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான பி.எல்.தேனப்பன் ஒரு பேட்டியில் இவர்கள் ஷூட்டிங்கில் செய்த காரியம் குறித்து நீண்ட நாள் ரகசியத்தை கூறியுள்ளார். இது நம்ம ஆளு படப்பிடிப்பின் போது நயன்தாரா சில சேட்டைகளை செய்வாராம்.

simbu nayan-updatenews360

பொதுவாக பி.எல்.தேனப்பன் தனது போனை யாரிடமும் கொடுக்க மாட்டாராம். ஆனால் நயன்தாரா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒரு நாள் இரவு நயன்தாரா அவரது போனை வாங்கியிருக்கிறார். அவரும் எதார்த்தமாக போனை கொடுத்திருக்கிறார். அப்போது, நயனும் சிம்புவும் அந்த போனில் இருந்து நடிகை கோபிகாவுக்கு ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் செய்துள்ளனர்.

p l thenappan-updatenews360

அந்த குறுஞ்செய்தியை பின்னர் அழித்தும் விட்டனர். மறு நாள் கோபிகா பி.எல்.தேனப்பனிடம் ‘ஏன் சார் அப்படி ஒரு மெசேஜ் அனுப்புனீங்க?’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் சத்தியமாக நான் இல்லை என்று சொல்லிவிட்டு யோசிக்கவே, அப்போது தான் சிம்புவும் நயனும் சேர்ந்து தன் போனில் இப்படி ஒரு காரியத்தை செய்ததை தெரிந்து கொண்டாராம். நயன் அடிக்கடி இந்த மாதிரி சேட்டைகள் எல்லாம் செய்வார் எனவும் பி.எல்.தேனப்பன் கூறியுள்ளார்.

simbu nayan-updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1185

    11

    6