தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியலில் கலக்கி வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ளும் வைக்கும் வகையில் இருந்தாலும், இவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டி தான் வருகிறார்கள்.
அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயமே. கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி உருவக்கேலிக்கு ஆளாகி பல எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவிந்தர் கடந்த ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி 20 லட்ச ரூபாயை பணமாக கேட்டுள்ளார். நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் தன்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை பெற்றுக்கொண்டு ரவீந்தர் இதனை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தனக்கு தன்னுடைய பணம் மட்டும் வந்தால் போதும் என்று கூறிவிட்டு இரண்டு தவணையாக ரூபாய் 15 லட்சத்தினை வங்கி கணத்தில் செலுத்தியும் உள்ளார்.
பின்னர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு விடுமுறை, செக் அனுப்பி இருக்கிறேன், நெஃப்ட் போட்டு இருக்கிறேன், என்று பல காரணங்களை தெரிவித்து AVOID செய்தும் வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த விஜய் சில ஆதாரங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து சென்னை கமிஷனருக்கு புகார் ஒன்றினையும் அளித்தும் உள்ளார். மேலும், விஜயின் மனைவியை ரவீந்தர் மிகவும் தவறாகவும் தரைக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகும் விஜய் தரப்பில் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து ரவீந்தர் தரப்பில் கூறுகையில், 15 லட்சம் வாங்கியது உண்மை தான் ஆனால், இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு முடியாமல் இவ்வாறு தன்னிடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விஜயின் உறவினர்கள் வந்தால் செக் கொடுத்து விடுவேன் என்று கூலாக பதிலும் அளித்துள்ளார்.
இந்நிலையில், ரவீந்தர் இந்த பணத்தை அளித்த பின்பு தான் தனது திருமண தேதியை அறிவிக்கப் போவதாக பேசிய ஆடியோ ஒன்றை விஜய்யும் லீக் செய்துள்ளார். தற்போது இந்த பிரச்சனையில் மகாலட்சுமி ரியாக்சன் மற்றும் அவர் கொடுக்கும் பதில்கள் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
This website uses cookies.