விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!

Author: Vignesh
10 April 2024, 11:13 am

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

raveendhar

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!

இந்நிலையில், ரவீந்திர தனது இன்ஸ்டாவில் என்னை மிக மோசமான சூழ்நிலைகளில் காணவில்லை என்று பதிவு செய்து தனது பழைய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதை பார்த்த ஒரு ரசிகர் விவாகரத்து ஆனதா என கேட்க அதற்கு ரவீந்தர் எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான். அதனால், நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது நடக்காது அது சாத்தியமற்றது என பதில் பதிவு போட்டுள்ளார்.

  • Selvaraghavan Viral Video உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!