ரவீந்திரன் அதிரடி கைது – நடுத்தெருவுக்கு வந்த மகாலக்ஷ்மி – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Author: Shree
7 September 2023, 9:05 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார். அது மட்டுமல்லாமல் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணத்தை வச்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆம், தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் தற்போது அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதையடுத்து மகாலக்ஷ்மியின் ஆடம்பர வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ