மலேசியாவில் சில்மிஷம்.. நடிகை மீனா உயிரோட இருக்க காரணமே அந்த நடிகர்தான்!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2025, 3:44 pm
மலேசியாவில் நடிகை மீனாவுக்கு நடந்த கசப்பான சம்பவம் குறித்து தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை மீனாவை காப்பாற்றிய கேப்டன்
அண்மையில் தயாரிப்பாளர் சிவா அளித்த பேட்டியில், விஜயகாந்த் குறித்து நிறைய விஷயங்களை பேசினார். அவர் ரீல் மட்டுமல்ல ரியல் வாழ்க்கையிலும் விஜயகாந்த் கேப்டன் தான் என கூறினார்.
ஒரு நாள் மலேசியாவில் இருந்து கலை நிகழ்ச்சிகள் முடித்து சிங்கப்பூர் செல்ல வேண்டி ஓட்டல் முன்பு பேருந்தில் ஏற சென்றனர்.
விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், நடிகைகளின் லக்கேஜ்களை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சுமார் 1000 பேர் அந்த இடத்தில் இருந்தனர். போலீஸ் பாதுகாப்பெல்லாம் இல்லை.
இதையும் படியுங்க: பவித்ரா பாவங்க.. அநியாயம் நடக்குது : கொந்தளிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்..!
அப்போது அங்கு பேருந்தில் ஏற முயன்ற நடிகை மீனாவிடம் ஹெல்மெட் போட்டு வந்த நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதைப் பார்த்த விஜயகாந்த் உடனே ஓடி போய் அந்த நபரை அடித்து துவைத்து எடுக்க, ரத்தம் சொட்ட சொட்ட அந்த நபர் அங்கிருந்து ஓடினார்.
அன்று மட்டும் விஜயகாந்த் பார்க்கவில்லை என்றால், இன்று மீனா உயிரோடு இருந்திருக்கவே மாட்டார் என தயாரிப்பாளர் சிவா ஒரு பேட்டியில் கூறினார்.