அடேங்கப்பா.. சில்க் கடித்த ஆப்பிளுக்கு இவ்வளவு மவுசா.. அதை ஏலம் விட்டு பைசா பார்த்த பிரபல தயாரிப்பாளர்..!
Author: Vignesh25 February 2023, 2:45 pm
1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.
படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த கனவுக்கன்னியாக நடிகை சில்க் ஸ்மிதா இருந்தாலும், நடிப்பை விட காந்தப்பார்வையை வைத்து அனைவரையும் மயக்கினார். நடிகை சில்க் ஸ்மிதா சிறுவயதிலேயே தற்கொலை செய்து மரணமடைந்துவிட்டது இன்று வரை மர்மமாக உள்ளது.

அவரது மரணத்தில் பல மர்மங்கள் நிறைந்தது காணப்படுகிறது. இந்நிலையில் 80, 90 காலங்களில் சில்க் ஸ்மித்தாவின் மவுஸ் எப்படிப்பட்டது என்று ஒரு சம்பவம் சுட்டி காட்டியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சில்க் கடித்து போட்ட பாதி ஆப்பிளை எடுக்க ரசிகர்கள் முட்டியடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த கடித்த ஆப்பிளை எடுத்த தயாரிப்பாளர் 2 ரூபாய் கூட போகாத அதை 300 ரூபாய்க்கு ஏலம் விற்று காசு பார்த்தாராம். இதனை ஒரு ரசிகர் 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறார்.
இதனிடையே, சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாறு படமாக கன்னட மொழியில் தி டர்ட்டி பிக்சர் என எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் அந்த ஆப்பிள் காட்சியை வைக்க வேண்டும் என அந்த நடிகை அடம் பிடித்தாராம். அதேபோல் இப்படத்தின் விளம்பரப் போட்டோவில் வீணா மாலிக் ஒரு ஆப்பிளை கடிப்பது போல் போஸ் கொடுத்திருந்தார். அப்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவியது.