ரூ.600 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! வில்லனாகும் கமல் படம் குறித்து வெளியான அறிவிப்பு..!

Author: Vignesh
26 June 2023, 10:30 am

கடந்த ஐந்து தசாப்தங்களில் மிக உயர்ந்த இந்திய நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மூலம் ஒரு பெரிய சாதனையை செய்து உள்ளார். அனிருத் இசையில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில், சூர்யா இணைந்து நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

vikram-updatenews360

தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இடையில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் பான் இந்தியன் படமான ‘ப்ராஜெக்ட் கே’ இல் கமல் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

indian 2_updatenews360

நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

project k updatenews360

மேலும் திஷா பாட்னி மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக தற்போது கமல் ஹாசனும் நடிக்கிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல் ஹாசன் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

kamal-updatenews360

இதனிடையே, இந்த படத்தில் சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் ‘ப்ராஜெக்ட் கே’ படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், தனது மற்ற படங்களுக்கும் ‘பிக் பாஸ் தமிழ் 7’ படத்திற்கும் இடையே ஒரே நேரத்தில் அதை முடித்துவிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?