கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகரின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா? மனச தேத்திட்டு கேளுங்க..!
Author: Vignesh2 February 2024, 6:15 pm
சிரஞ்சீவியின் சாந்தாபாய் என்ற படத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு அறிமுகமானவர்தான் பிரம்மானந்தம். இவர் இதுவரையில், சினிமாவில் 1100 படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. தன்னுடைய, எதார்த்தமான நடிப்பால் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார்.

இவர் நடித்த அனைத்து படங்களிலும், இவரது காமெடி பெரிதாக பேசப்பட்டது. இவர் அனைத்து, முன்னணி டோலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரை, நடிப்பிற்கு ஏற்ப ஒரு நகைச்சுவை கலைஞனுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காமெடி நடிப்பை தாண்டி தயாரிப்பு நிறுவனம் பிசினஸ் என 68 வயதிலும் பிசியாக இருக்கும் பிரம்மானந்தம் பல கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரர் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க சுமார் 4 முதல் 6 கோடி வரை இவர் சம்பளமாக வாங்குகிறாராம்.

1100 படங்கள், விளம்பரங்கள், தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு வகையிலும் இவருக்கு வருமானம் இருப்பதாகவும், இவரின் சொத்து ஒட்டுமொத்தமாக 490 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள் இவர் இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறாரா என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.