தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் தமிழகத்தில் தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதாவது, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியிட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆடியோ வெளியீடு நடக்காததற்கு காரணம் பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல என்று இவ்வாறு x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்ப்போது ஆடியோ லான்ச் ரத்திற்கு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் “நடிகர் விஜய்யின் லியோ படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஆளும்கட்சி தரப்பு நடிகர் விஜய் மிரட்டி வருவதாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில், லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்தாகியுள்ளது. எனவே சவுக்கு ஷங்கர் சொன்னது அனைத்தும் உண்மை தான் போல உதயநிதியை பார்த்து விஜய் பயந்து இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளாரோ?என சந்தேகத்தை வரவைக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு சங்கீதா தான் காரணம் என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.
இந்நிலையில், இந்த மாதம் இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதா வரமறுத்த காரணத்தினால் இனி நடக்காது என தகவல் வெளியானது. விஜயுடன் ஏற்பட்ட தகராறு மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வரும் சங்கீதா விஜயின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளாராம்.
அத்துடன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வரும் விஜய்யின் மீது சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் விஜய் தனியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கும் என விஜய் தரப்பு கூறியுள்ளது. விஜய் இப்படி இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு யார் பக்கம் பேசுவது என திண்டாடி வருகிறாராம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.