பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க… வெடித்தது போராட்டம்..!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2024, 2:49 pm
விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி போராட்டம் வெடித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான பேன்ஸ் உண்டு. தற்போது 8வது சீசன் பொதுமக்கள் மத்தியில் மவுசு குறைந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதிக்காக வாரக் கடைசியில் நிகழ்ச்சியை பார்க்க மட்டும் பேன்ஸ் கூடுவது உண்டு.
இதையும் படியுங்க: அப்பாவோட கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.. புயலை கிளப்பிய விஜய் மகன்!
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய் யவேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இளம் தலைமுறையினர் சீரழிவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ் பிக்பாஸ் மட்டுமல் மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கலாச்சார சீரழிவின் உச்சக்கட்டத்திற்கே செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். சினிமாவில் உள்ளது போனறு டிவி நிகழ்ச்சிகளுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது,.