உங்களுக்கும் மாயாக்கும்.. வாயை கொடுத்து வாங்கிகட்டி கொண்ட புகழ், குரேஷி.. பதறியடித்து வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
13 January 2024, 4:53 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை வைத்து தான், இதற்கு முன் நடந்த சீசன்களின் போட்டியாளர்களை ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், இந்த சீசனில் முதல் முறையாக கமலஹாசனை தான் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவியை சேர்ந்த புகழ் மற்றும் குரேஷி இருவரும் மேடை ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரையும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் ட்ரோல் செய்தனர்.

maya kamal

அதாவது, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் கமல் மற்றும் மாயாவை சேர்த்து வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தனர். அவர்கள் பேசி வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரது கண்டனத்தை இணையதளத்தில் வெளியான நிலையில், பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

maya

இந்நிலையில், பதறிய இருவரும், கமலஹாசன் சார் ரசிகர்களுக்கு வணக்கம். இரண்டு மாதத்திற்கு முன்பு துபாயில் நானும் என் நண்பரும் கலந்து கொண்டோம். அப்போது, எடுத்த ஸ்கிரிப்டில் சில வார்த்தைகள் கமல்ஹாசன் ரசிகர்களை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. கமலஹாசன் ரசிகர்களுக்கு மனம் புண்பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

pugazh kureshi

மேலும், இனி அப்படி நான் அப்படி பண்ண மாட்டேன். நான் அப்படி பண்ணக்கூடிய ஆள் கிடையாது என்று புகழ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குரேஷிம் வீடியோ மூலம் தான் செய்த செயலுக்கு மன்னிப்பை கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 412

    0

    0