கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை?.. உண்மையை உடைத்த குக் வித் கோமாளி பிரபலம்..! (வீடியோ)

Author: Vignesh
3 March 2023, 2:30 pm

கடந்த 2010ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.

அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மணிமேகலை. குக் வித் கோமாளி ஷோவில் புகழ், சிவாங்கி, சுனிதா, பாலா மணிமேகலை உள்ளிட்டோர் மக்கள் பேவரைட். இந்நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை” என அவர் கூறி இருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில், “இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை விலக பலர் பலவிதமாக காரணங்களை கூறி வருகிறார்கள். அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டதாகவும் செய்திகள் இணையத்தில் பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து விஜய் டிவி புகழ் சமீபத்தில் அளித்த பேட்டியில் என்ன நடந்தது என்று தெரிவித்திருக்கிறார். மணிமேகலை விலகியது அவர்களின் தனிப்பட்ட விசயம் என்றும், கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியது என்றும், என்ன ஏது தெரியாமல் ரூமர்ஸ் பரப்பாதீர்கள் என்றும், மணிமேகலை பிரக்னட்-ஆக இருந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான் என்றும், அதை வைத்து வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும், அவர்களுக்கு எதுவேனாலும் நடந்திருக்கலாம் என புகழ் தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்