நம்ம பொண்ணு பிக் பாஸ்ல ஜெயிக்கணும்.. ஓட்டு போடுங்க : நடிகர் புகழ் வேண்டுகோள்!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2025, 11:56 am
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. இதனால் பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
இதே போல இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணான ஸ்ருதிக்கா அர்ஜூன் படு ஜோராக விளையாடி வருகிறார். அவர் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், வீடியோக்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஸ்ருதிக்காவுக்கு ஆதரவுகளை அள்ளி தருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான புகழ், வீடியோ மூலம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Thank u @pugazhoffl
— Shrutika (@Shrutika_arjun) January 7, 2025
PLS VOTE & SAVE SHRUTIKA
#Shrutikarjun #tamilponnu #tamil #BiggBossTamilSeason8 #BiggBoss18 pic.twitter.com/YC99u6Ym6I
அதில் நம்ம ஊரு பொண்ணு, ஸ்ருத்திகா இந்தி பிக் பாஸ் 18வது சீசன் நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு வருகிறார். அவர் ஜெயிக்க வேண்டும், அதற்காக நாம் தான் அவருக்கு ஓட்டு போட வேண்டும் என கூறியுள்ளார். ஒரு பிக் பாஸ் போட்டியாளருக்காக பிரபலம் வேண்டுகோள் வைத்துள்ளது கவனத்தை ஈர்த்து வருகிறது.