நன்றி சொல்லிக்கிட்டே இருக்கலாம்…. யுவன் ஷங்கர் ராஜாவை புகழ்ந்து தள்ளிய புகழ்!
Author: Rajesh31 January 2024, 12:10 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் புகழ். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
குறிப்பாக குக் வித் கமலி நிகழ்ச்சியில் ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், மணிமேகலை, பவித்ரா உடன் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகள் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது. ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே தனது நீண்ட நாள் காதலி பென்ஸி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது. புகழ் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது Mr Zoo Keeper என்ற படத்தில் புகழ் வித்யாசமான ரோல்களில் நடித்து வருகிறார். அதன் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பதை நினைத்து பெருமையாக பேசியுள்ள புகழ் தல, தளபதி போன்ற பெரிய நடிகர்களுக்கு இசையமைத்த ஒரு இசையமைப்பாளர் எனது படத்திற்கு இசையமைக்கிறார் என்றால் அது பெரிய விஷயம். அதற்காகவே அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. யுவன் மிகவும் ஜாலியான ஒரு நபர், பார்க்க சாதாரணமாக இருந்தாலும் இசையில் கலக்கிவிடுவார் என கூறினார்.