“சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் இல்லை” – கடைசியா என்னிடம் இதை தான் சொன்னார்: அடித்து சொல்லும் பிரபலம்..!
Author: Vignesh14 January 2023, 12:30 pm
தமிழ் உட்பட தென்னிந்திய சினிமாவில் 80களில் இருந்தே கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் கவர்ச்சி ஆட்டம் போட வந்த சில்க் ஸ்மிதா பிரபல இயக்குனர்களால் அறிமுகம் செய்யப்பட்டார்.
சில்க் ஸ்மிதா
அப்படி தென்னிந்திய படங்களில் கவர்ச்சி நடனமாடியும் நடித்து முன்னணி இடத்தினை பிடித்தார். சுமார் 450 படத்திற்கும் மேல் நடித்துள்ள சில்க் ஸ்மிதா தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டு 3 படத்தினை தயாரித்தும் இருந்தார்.
ஆனால் அப்படம் தோல்வியை தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் மதுப்பழக்கத்தை பழகி இருக்கிறார். அப்படி பாக்கு போடுவது, அளவுக்கு மீறிய போதைக்காக போதை ஊசியையும் போட்டுள்ளார்.
இதனால் தான் சில்க் ஸ்மித்தா தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணமும் கூறப்பட்டது. அந்த போதை ஊசியை போடுவதற்காகவே ஒரு மருத்துவரை வரவழைத்து தொடர்ந்து போட்டு வந்துள்ளார் சில்க் ஸ்மிதா.
போதை ஊசி
இது போகபோக இருவருக்கும் இடையில் கணவர் மனைவிப்போல் வாழ ஆரம்பித்தது. மருத்துவருக்கு வயதுக்கு வந்த ஆண் மகன் இருந்ததாகவும் சினிமாவில் ஆர்வம் கொண்டதால் சில்க் ஸ்மிதா ஷூட்டிங்கிற்கு கூட்டிச்செல்வதுமாக இருந்துள்ளார்.
இருவருக்கும் நெருக்கம் இருப்பதை தவறாக நினைத்து மருத்துவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மதுவுக்கு அடிமையாகி தற்கொலை முடிவையும் சில்க் ஸ்மிதாவை எடுக்க வைத்திருக்கிறார் அந்த மருத்துவர். இப்போது இந்த சம்பவத்தை பிரபல சினிமா பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.
இதனிடையே, அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இன்னும் முடிவில்லாமல் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, சில்க் ஸ்மிதாவிற்கு மிகவும் நெருக்கமானவரும், வழிகாட்டியுமானவர் தான் நடன கலைஞர் புலியூர் சரோஜா. அவர் அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வேளையில் சில்க் ஸ்மிதா பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
சூரக்கோட்டை சிங்கக்குட்டி என்ற படத்தில் நடிகர் பிரபுவுடன் சில்க் ஸ்மிதாவை நடனமாட வைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், சகலகலாவல்லவன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு பாடலுக்கு ஆடினார் சில்க் ஸ்மிதா. நேத்து ராத்திரி அம்மா பாடலுக்கு சில்க் ஸ்மிதாவுக்கு உணர்ச்சிகளை வெளிக் கொண்டு வரத் தெரியவில்லை என்பதால், சில்க்கின் வயிற்றில் பிரேமில் தெரியாதவாறு கிள்ளியதாகவும், சரியாக அம்மா என்ற வலியில் கற்றுவது போல் உணர்ச்சியை சில்க் வெளிப்படுத்தியதாக புலியூர் சரோஜா தெரிவித்தார்.
சில்க்கின் கண்கள் இயற்கையாகவே அழகாக இருக்கும். அவரது உடலும் அழகுதான். உதடும் அழகும்தான். இத்தனை அழகை ஆண்டவன் அனைவருக்கும் கொடுக்க மாட்டார் என்றும், மோகன்லாலுடன் ஒரு மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்தபோது அவள் குழந்தை மாதிரி தான் இருப்பாள் என்றும்,
ஒரு முறை என்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என தெரிவித்த சில்க். நீங்க தான் கல்யாணத்திற்கு வந்து முன்னாடி நின்று நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டதாகவும், எந்த நகைகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறிய போது சில்க்குக்கு கண்களில் கண்ணீர் வந்தது இன்றும் என்னால் மறக்க முடிய வில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, சில நாள் கழித்துதான் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தி தெரியவந்த உடனே சில்க்iக பார்க்க சென்றதாகவும், அவளைப்பார்க்க கஷ்டமாக இருந்தது என்றும், அங்கேயே தெரிந்தது ஏதோ செய்துவிட்டார்கள் என்றும், அவள் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவள் இல்லை எனவும், நிச்சயமாக சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.
சில்க் இறந்து அடுத்த 10 நாள் என்னால் தூங்கக் கூட முடியவில்லை என்றும், சில்க் ஸ்மிதாவை யாரு என்ன செய்திருந்தாலும் நல்லவே இருக்க மாட்டாங்க என உருக்கமாக நடன கலைஞர் புலியூர் சரோஜா தெரிவித்துள்ளார்.