புறநானுறில் இருந்து விலகிய SK…லீக்கான தகவலால் கோலிவுட் பரபரப்பு…!
Author: Selvan2 January 2025, 3:24 pm
புறநானுறு படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்த ஆகி ரொம்ப பிஸியாக இருக்கிறார்.
அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்திலும்,சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானுறு படத்திலும் நடித்து வருகிறார்.
சுதா கொங்கரா ஏற்கனவே சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.அதனால் இந்த படமும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.இவர் ஹீரோயினியாக நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி,அதர்வா என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இதையும் படியுங்க: பவித்ரா பாவங்க.. அநியாயம் நடக்குது : கொந்தளிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்..!
இந்த நிலையில் படத்தின் டைட்டில் புறநானுறு இல்லையாம்,படத்திற்கு வேற டைட்டிலை படக்குழு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது 1965-ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்படவுள்ளதால் படத்திற்கு 1965-னு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.