GV-க்கு 100…SK-க்கு 25 : சுதா கொங்கரா படத்தின் மாஸ் கூட்டணி….படத்தின் அப்டேட் வெளியீடு..!
Author: Selvan15 December 2024, 12:52 pm
“புறநானூறு”யில் சிவகார்த்திகேயனின் அதிரடி ரோல்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்பயணத்தில் பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறார்.சமீபத்தில் அவருடைய அமரன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன்,அவருக்கு ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை வழங்கியது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இந்த வெற்றிக்குப் பின், சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான SK 25 புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார்.இந்தப் படம் பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிறது.
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில்,ஜெயம் ரவி, அதர்வா முரளி, மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இதையும் படியுங்க: “குட் பேட் அக்லி “அஜித்தின் புது கெட்டப்..நடிகர் பிரசன்னா போட்ட பதிவு…ரசிகர்களிடையே வைரல்…!
இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் இது அவரது 100வது படமாகும். தனது 100வது படமாக இதனைத் தேர்வு செய்தது குறித்து அவர் தனிப்பட்ட மகிழ்ச்சியை வெளியிட்டார்.”சுதா கொங்கராவுடன் மீண்டும் பணிபுரிய மிகுந்த மகிழ்ச்சி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று தனித்துவமான தோற்றங்களில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேங்ஸ்டர் அடித்தளத்தில் உருவாகும் ஆக்ஷன்-ட்ராமா கதையை மையமாக கொண்ட இந்தப் படத்தில், SK நடிப்பு சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.