வடமாநிலங்களில் ரன்வீர் சிங்கின் படத்தை ஓவர்டேக் செய்த புஷ்பா..!

Author: Rajesh
26 January 2022, 10:53 am

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

வடமாநிலங்களில் இந்தி பேசும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது புஷ்பா படம் . இதன் காரணமாக, மும்பையில் ரூ. 35.89 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ’83’ படத்தை விட கூடுதல் வசூல் என கூறப்படுகிறது.

pushpa 2 - updatenews360

மும்பையில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களில் அக்ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி படம் ரூ.81.43 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ரன்வீர் சிங்கின் ’83’ படம் ரூ.34.03 கோடி மூன்றாமிட த்திலும் உள்ளன. மேலும், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், அசாம் மற்றும் ஒடிஷா மாநிலங்களிலும் ’83’ படத்தை விட ‘புஷ்பா’ சிறப்பான வரவேற்பையே பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 4370

    0

    0