கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத புஷ்பா படம்…!

Author: Rajesh
23 January 2022, 11:12 am

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் விஸ்ரீ பிரசாத் பிண்ணனி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஸ்ரீ வள்ளி பாடலுக்கு, அல்லு அர்ஜுனின் நடன ஸ்டெப்பை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா போட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த பாடலுக்கு ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://vimeo.com/669056911
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?