தளபதி ஊர்ல இல்ல… இப்போதைக்கு இத வச்சிக்கோங்க – கலங்கிய தம்பதிக்கு கை நிறைய பணம் கொடுத்த புஸ்லி ஆனந்த்!

Author: Shree
26 August 2023, 3:54 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வரும் விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். அதற்காக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வைத்து மக்களுக்கு தேவையான மற்றும் மக்களை கவரும் அனைத்து சமூக நலன் சார்ந்த காரியங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய வழிகாட்டியாக. விஜய்யின் நிழலாக இருப்பவர் புஸ்லி ஆனந்த் தான். தன்னுடைய ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் புஸ்லியின் ஆலோசனையின்படி தான் கேட்டு நடக்கிறாராம் விஜய்.

தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக புஸ்லி ஆனந்தே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், ஐடி விங் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் கலந்துக்கொள்ளவில்லையென்றாலும் அவரது சார்பில் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அந்நிகழ்ச்சி முடிந்து வந்திருந்தவர்களுக்கு புஸ்லி ஆனந்த் உணவுகளை பரிமாறினார். அப்போது அங்கு வந்த வயதான தம்பதிகள் புஸ்லி ஆனந்திடம் உதவி கேட்டனர். உடனே சட்டை பாக்கெட்டிற்குள் கைவிட்டு சில 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உதவி செய்த அவர், ” ஊர்ல இல்ல…. உங்கள் விவரங்களை கொடுத்துட்டு போங்க அவர் வந்தவுடன் உங்களை பற்றி அவரிடம் எடுத்துக்கூறி மாத மாதம் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் என உறுதியளித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 478

    1

    0