புஷ்பா 2 வசூலில் கொல மாஸ்..1000 கோடியை தட்டி தூக்கிய அல்லு அர்ஜுன்…படக்குழு வெளியிட்ட அதிரடி அப்டேட்..!
Author: Selvan10 December 2024, 8:10 pm
புஷ்பா 2:முதல் வாரத்திலேயே ரூ.1000 கோடி வசூல்!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
டிசம்பர் 5 அன்று வெளியான இப்படம், முதல் வார இறுதிக்குள் 922 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
இதையும் படியுங்க: சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா பிரபல ஹீரோ…ஆர்.ஜே.பாலாஜி போடும் மாஸ்டர் பிளான்…!
புஷ்பா 2, வார நாட்களிலும் வசூல் குறையாமல், வட இந்தியா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் செம்ம வேகத்தில் ஓடி வருகிறது.ராஜமெளலி படங்களுக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவில் அலறவைக்கும் வசூல் சாதனை செய்த நடிகராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார்.
மேலும், புஷ்பா 2வின் வெற்றி, ராம்சரண்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்திற்கும் நெருக்கடி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வந்துள்ளது . தற்போது இவருடைய சம்பளம் 350 கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.