முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 10:41 am

தற்போதைய சினிமா காலக்கட்டத்தில் பான் இந்தியா படம் எடுப்பது சாதாரணமாகிவிட்டது. தற்போது பெரும்பால முன்னணி நடிகர்களின் படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

முதல் நாளே வசூலில் மிரள வைத்த புஷ்பா 2

அந்த வகையில் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது புஷ்பா 2 படம். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள புஷ்பா 2 நேற்று பயங்கர வசூல் செய்துள்ளது.

இதையும் படியுங்க: பாலிவுட்டை கலக்க போகும் பகத் பாசில்…ஜோடியாக பிரபல நடிகை..!

இப்படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் செயல்பட, பின்னணி இசை அமைப்பை சாம் சி எஸ் மேற்கொண்டிருந்தார்.

Pushpa 2 First Day Box Office Collection

மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த “புஷ்பா 2,” உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிகரமாக பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில், இப்படம் முதல் நாள் மட்டும் ரூ. 8.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் படத்துக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இனி படத்தின் வசூல் விகிதம் நாளுக்குநாள் எப்படி மாறும் என்பதை கவனிக்கலாம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…