டாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
Author: Selvan27 December 2024, 8:04 pm
பாகுபலியை முந்துமா புஷ்பா 2?
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் போன்றோர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் அதிரடி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
ஒரு பக்கம் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியில் பெண் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால்,அல்லு அர்ஜுன் மீது பல விதமான எதிர்ப்புகள் கிளம்பி,படத்தின் மெகா வெற்றியை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த விவகாரத்தால் இனி எந்த படத்திற்கும் சிறப்பு காட்சி கிடையாது என அதிரடி உத்தரவை அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படியுங்க: அண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
இந்த நிலையில் புஷ்பா 2 தியேட்டரில்,இதுவரைக்கும் 1700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 100 கோடி வசூலை பெற்று,பாகுபலி வசூல் சாதனையான 1800 கோடியை கடந்து,உலக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.