புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
Author: Selvan4 December 2024, 10:00 pm
புஷ்பா 2: தி ரூல் விமர்சனம்
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல், இந்திய சினிமாவின் மிக பிரமாண்ட திரைப்படங்களில் ஒன்றாக,நாளை சுமார் 12000 திரைகளில் பான் இந்திய அளவில் வெளியாகிறது.
படம் வெளியாகுவதற்கு முன்பே, 100 கோடி வசூலை டிக்கெட் முன்பதிவில் எட்டியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் சென்சார் குழுவை சேர்ந்த உமைர் சந்து படத்தை பார்த்த பின்பு,தன்னுடைய X தள பதிவில் அவருடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“புஷ்பா 2 ஒரு பக்கா வணிகப்படமாக உருவாகியுள்ளது. மாஸ் மற்றும் கிளாஸ் விரும்பும் ரசிகர்களுக்கு சமமாக இப்படம் மகிழ்ச்சி அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
அல்லு அர்ஜுனின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்கும் அளவுக்கு மாஸாக உள்ளதுடன், அவரது காமெடியும்,இப்படத்தின் பலமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
ராஷ்மிகா மந்தனா-வின் நடிப்பு பாராட்டுக்குரியது என்றாலும், ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கியமான ரோலாக அமைகிறது என பதிவிட்டுள்ளார்.
First Detail Review #Pushpa2 : It comes across as a paisa vasool, seeti-maar entertainer which will be loved by classes and masses alike. At the box office, the film will break records and emerge as the biggest hit of the year so far.
— Umair Sandhu (@UmairSandu) December 3, 2024
🌟🌟🌟🌟 pic.twitter.com/ElKW30KYBS
படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இடைவேளை காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்தும் எனவும்,புஷ்பா 3 குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் எனத் தெரிவித்துள்ளார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மட்டுமே கொஞ்சம் குறையாக உள்ளது என தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்..
முதல் நாள் வசூல் கணிப்பு
முதல் நாளில் மட்டும் உலகளவில் 250 கோடி வசூலிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், வாழ்நாள் வசூலாக 1000 கோடி வரையிலும் வசூலிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.