6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2024, 2:13 pm
முதல் நாளிலேயே ரூ. 294 கோடிகளை வசூலித்த “புஷ்பா 2” திரைப்படம், இதுவரை எந்த இந்திய திரைப்படமும் சாதிக்காத சாதனையை படைத்துள்ளது.
இதையும் படியுங்க : பிரபல நடிகர் கடத்தல்… ரூ.1 கோடி கேட்டு கட்டி வைத்து டார்ச்சர் : திரை உலகில் ஷாக்!
மேலும், படத்தின் தினசரி வசூல் விவரங்கள் இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
₹1000 கோடியை அடிச்சு தூக்கிய அல்லு அர்ஜூன்
படக்குழுவின் தகவலின்படி:
- முதல் நாளில்: ரூ. 294 கோடி
- இரண்டாவது நாளில்: ரூ. 449 கோடி
- மூன்றாவது நாளில்: ரூ. 621 கோடி
- நான்காவது நாளில்: ரூ. 829 கோடி
- ஐந்தாவது நாளில்: ரூ. 922 கோடி
இதனைத் தொடர்ந்து, ஆறாவது நாளில் உலக அளவில் ரூ. 85 முதல் 90 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி “புஷ்பா 2” மொத்த வசூல் ரூ. 1010 கோடிகள் முதல் ரூ. 1015 கோடிகள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமா வரலாற்றில் மிகவேகமாக ரூ. 1000 கோடிகளை கடந்த முதல் திரைப்படமாக “புஷ்பா 2” புதிய சாதனை படைத்துள்ளது.