புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!
Author: Selvan13 March 2025, 7:03 pm
மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை
புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: பிச்சை கூட எடுப்பேன்..அவர் கூட நடிக்க மாட்டேன்..நடிகை சோனா அட்டாக்.!
அவருடைய மகன் 9 வயது சிறுவன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அவர் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில்,அவரது உடல்நிலை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி பார்க்க ரேவதி என்ற பெண் தனது மகன் ஸ்ரீதேஜுடன் சந்தியா திரையரங்கிற்கு சென்றிருந்தார்.படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், ரசிகர்கள் திரையரங்கை முற்றுகையிட்டனர்.அதே நேரத்தில், படக்குழுவைச் சேர்ந்த அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் அங்கு வந்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,ஸ்ரீதேஜ் வென்டிலேட்டர் ஆதரவின்றி சுவாசிக்கிறார்.எண்டோஸ்கோபிக் காஸ்ட்ரோஸ்டமி முறையின் மூலம் அவரது உடலுக்குள் உணவு செலுத்தப்படுகிறது.
ஆனால்,அவருக்கு முழுமையாக நினைவாற்றல் திரும்பவில்லை. அவருக்கு கூடவே பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், அவர் தனது குடும்பத்தினரை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.