வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!

Author: Selvan
19 December 2024, 9:55 pm

ரசிகர்களிடம் வைரல் ஆகும் கிஸ்ஸிக் பாடல்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரையரங்கில் சக்கை போடு போட்டு,வசூலை அள்ளி வருகிறது புஷ்பா 2 .இப்படத்தின் முக்கியமான ஒரு பாடலான கிஸ்ஸிக் பாடலின் விடீயோவை படக்குழு வெளியிட்டு,ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

sreeleela dance Pushpa 2

புஷ்பா முதல் பாகத்தில் நடிகை சமந்தா “ஊ சொல்றியா” பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடி ரசிகர்களை மயக்கினார்.அந்த வகையில் புஷ்பா 2 வில் நடிகை ஸ்ரீ லீலா கிஸ்ஸிக் பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடியுள்ளார்.

இதையும் படியுங்க: யாரும் கிட்ட வந்துறாதீங்க…நாளுக்கு நாள் எகிறும் புஷ்பா 2 வசூல் வேட்டை…!

ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் வரிகள் ட்ரெண்ட் ஆகி பலரும் ரீல்ஸ் செய்துவரும் நிலையில்,தற்போது பாடலின் முழு வீடியோ வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

இந்த பாடலை ரிப்பீட் மோடில் பார்க்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் ஸ்ரீ லீலா நடனம் ஆடி இருப்பார்.பாடல் வெளியாகி சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!