விஜயை தூக்கி சாப்பிட்ட அல்லு அர்ஜுன்….புஷ்பானா flower-னு நினைச்சியா.. fire டா..!

Author: Selvan
16 November 2024, 3:52 pm

புஷ்பா முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி 360 கோடிக்கு மேல் வசூலை பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.புஷ்பா முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜுன் எப்படி பெரிய சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுத்து முதலாளியாக மாறினார் என்று சொல்லப்பட்டது.

allu arjun pushpa 2 salary

இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை அரசை எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பதை படமாக எடுத்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதுமாக தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படியுங்க: வாழு இல்ல வாழ விடு..தனுஷை தாக்கிய விக்னேஷ் சிவன்..!

இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் 300 கோடின்னு சொல்லப்படுகிறது.நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கினார்.தற்போது அவருடைய கடைசி திரைப்படமான தளபதி 69 படத்திற்கு 275 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகின.

தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கிய நபராக விஜய் இருந்துவந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 300 கோடி சம்பளம் வங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!