பேட்ட பாய்ற நேரம் வந்தாச்சு…புஷ்பா 2 ஓடிடி தேதி குறிச்சாச்சு…ரசிகர்கள் குஷி…!
Author: Selvan17 December 2024, 8:00 pm
புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பெரும் வெற்றியுடன் 300 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்தது.
அதன்பின்பு 3 வருடங்களுக்கு பிறகு புஷ்பா 2 தி ரூல் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது.புஷ்பா 2 தற்போது வரை 1400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். படத்தின் வசூல் விரைவில் 2000 கோடி ரூபாயை அடையும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படியுங்க: ஸ்டைலோ “ஸ்டைல்”…விடாமுயற்சி படத்தில் அஜித்தின் புது கெட்டப்ப பாருங்க…அசந்து போவீங்க..!
தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம், ஜனவரி மாதம் 9-ம் தேதி புஷ்பா 2 “நெட்ஃபிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் அடுத்த வருடம் புஷ்பா 2 OTT-யில் வசூல் வேட்டை பண்ண ரெடி ஆகியுள்ளது.திரையரங்கில் பெரும் வெற்றியை கண்டு வரும் புஷ்பா 2 OTT-யிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.