100 கோடி வசூலை அள்ளிய புஷ்பா 2 ..டிக்கெட் முன்பதிவில் புது சாதனை..!
Author: Selvan3 December 2024, 9:09 pm
புஷ்பா 2 முதல் நாள் வசூல் கணிப்பு
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி உலகளவில் திரையிடப்படுகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கிட்டத்தட்ட 12000 திரைகளில் இப்படம் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் போட்டி போட்டு இப்படத்தின் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.இதுவரை 100 கோடிக்கு மேல்,டிக்கெட் முன்பதிவு வசூல் செய்துள்ளதாக,அதிகாரப்பூர தகவல் வெளியாகி புது சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்க: பிரபலங்களின் விவாகரத்துக்கு இதான் காரணம்: சினேகா-பிரசன்னா சொன்ன பதில்…அட இது தெரியாம போச்சே…!
இப்படம் முதல் நாள் வசூலில் கண்டிப்பாக புதிய மைல்கல்லை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ராஜமௌலி புஷ்பா 2 பற்றி என்ன சொன்னார்?
இப்படத்தை குறித்து ராஜமௌலி தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.அதில் புஷ்பராஜ் என்ட்ரி சீனை இயக்குனர் சுகுமார் என்னிடம் காட்டினார்.அதனை பார்த்து நான் மிரண்டு போனேன்.முதல் காட்சியே இப்பிடி இருக்கிறது என்றால்,மொத்த படமும் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் என பேசி இருப்பார்.
Rajamouli Garu About Pushpa❤️@alluarjun @ssrajamouli#Pushpa2TheRule#AlluArjun? pic.twitter.com/ECRIIxWlF8
— ? Avni Pandit (AA?❤️?) (@Avni_Pandit1) December 3, 2024
புஷ்பா 3 அப்டேட்
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் புஷ்பா-3 க்கான அப்டேட் இருக்கும் எனவும் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
அதில் படத்தின் டைட்டில் புஷ்பா-3 ராம் பேஜ் என குறிப்பிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் படத்தை காண இருக்கின்றனர்.