நடிகர் அல்லு அர்ஜுன் மீது புகார்..ரசிகர்களால் வந்த வினை…!

Author: Selvan
1 December 2024, 7:37 pm

“புஷ்பா 2” திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் சர்ச்சை

தெலுங்கு திரையுலகில் முன்னனின் நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன்.இவருடைய நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதிலும் குறிப்பாக இப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள்.

Allu Arjun ARMY term complaint

தற்போது இதனுடைய இரண்டாம் பாகமான “புஷ்பா 2 தி ரூல்” டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாகிறது.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது.

இதையும் படியுங்க: பிரபல நடிகருக்கு டாக்டர் பட்டம்…குவியும் பாராட்டுக்கள்…!

Allu Arjun Pushpa 2 controversy

இந்நிலையில் மும்பையில் நடைப்பெற்ற நிகழ்வின் போது அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ARMY என அழைத்துள்ளார்.மேலும் இந்த படம் வெற்றி பெற்றால் என் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது “GREEN PEACE ENVIRONMENT AND WATER HARVESTING FOUNDATION”தலைவர் ஸ்ரீனிவாஸ் என்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத்  ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் ARMY என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்றும்,ராணுவத்தினர் நாட்டை பாதுகாப்பவர்கள்,ரசிகர்களை அவ்வாறு அழைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.இந்த செய்தி தற்போது சினிமா ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

  • GV Prakash and Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!