விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜூன்.. கைது செய்ய தீவிரம்.. போலீஸ் குவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan24 December 2024, 11:23 am
ஐதராபாத்தில் தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஆஜரானார்.
போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜூன்
புஷ்பா 2 திரைப்படம் வெளியான நாளன்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒரு பெண்ணின் மரணம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இரண்டாவது முறையாக விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்டப்பள்ளி காவல் நிலைய போலீசார் நேற்று அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இதையும் படியுங்க: வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
அந்த நோட்டீஸில் இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை ஏற்று அல்லு அர்ஜுன் தன்னுடைய வக்கீல் உடன் வீட்டிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம் சென்று கொண்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு சிக்கடபள்ளி காவல் நிலையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.