தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது புஷ்பா 2 -தி ரூல்.
இப்படத்தின் ட்ரெய்லரை பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வெளியிட்டனர்.இதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது,கிட்டத்தட்ட பல கோடி செலவில் விளம்பரப்படுத்தி புஷ்பா ட்ரெய்லரை மிகப் பிரமாண்டமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் ராஷ்மிகா மந்தனா,ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி பான் இந்தியா ரிலீசாக வெளியாகவுள்ளது.
புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா கிஸ்சிக் என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
படத்தில் பஞ்ச் வசனங்களுக்கும்,சண்டை காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை என்று தோன்றுகிறது. செம்மரக்கடத்தலில் ஈடுபடும் புஷ்பா எப்படி இன்டர்நேஷனல் அளவில் பெரிய கடத்தல்காரனாக ஆகிறான் என்பதை வெளிப்படுத்துகிறது.
“புஷ்பா flower நினைச்சியா brand டா” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மொத்தத்தில் படம் அடுத்த மாதம் வசூல் வேட்டையை வாரி குவிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.