புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
Author: Selvan3 January 2025, 9:53 pm
தாறுமாறான வசூலில் புஷ்பா2
கடந்த வருடம் வெளியான படங்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிட்ட படம் அல்லு அர்ஜுனின் புஷ்பா2 தி ரூல்.இப்படத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் போன்றோர் நடிப்பில் கலக்கி இருப்பார்கள்.
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலே இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.படமும் கடந்த மாதம் வெளியாகி தற்போது வரை வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
படம் தற்போது வரை 1799 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது,இதுவரை வெளியான படங்களில் பாகுபலி 2 1800 கோடிவசூல் செய்து இந்திய அளவில் முதலிடம் இருக்கும் நிலையில்,கூடிய விரைவில் இந்த வசூலை கடந்து 2000 கோடி ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புஷ்பா2 பிரச்சனையில் உயிரிழந்த பெண்மணி விவகாரத்தில் இன்று நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வழங்கி,ஒரு லட்சம் தொகையை மட்டும் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.