இந்திரா காந்திக்கு அதிர்ச்சி கொடுத்த சில்க் ஸ்மிதா.. மிரட்டி விட்ட BIOPIC வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2024, 10:50 am
80களின் கனவுக்கன்னி மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் ஒரே நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா.
வசீகரிக்கும் கண்கள், மழலை பேச்சு என 80 மற்றும் 90 காலக்கட்ட ரசிகர்களுக்கு தெரியும் அவரின் கொஞ்சலும், மிரட்டிவிடும் பேச்சும்..
SILK SMITHA – QUEEN OF THE SOUTH
சில்க் ஸ்மிதா இருந்தாலே அந்த படம் ஹிட். முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்தாலும், சில்க் கால்ஷீட் பெற தவமாய் தவமிருப்பர் தயாரிப்பாளர்கள்.
இதையும் படியுங்க: இது சும்மா டிரெய்லர்தான்… ஒரு வாரத்தில் மீண்டும் புயல்? 19 மாவட்டங்களுக்கு அலர்ட்!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரின் பெருமையை. ஆனால் உச்ச நட்சத்திரமாக இருந்த போதே தனது தனிப்பட்ட வாழ்க்கையால் தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவை இன்று வரை மறக்காத ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் BIOPIC குறித்த GLIMPSE வீடியோ வெளியாகியுள்ளது. SILK SMITHA – QUEEN OF THE SOUTH என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்திருந்த சந்திரிகா ரவி சில்க் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் GLIMPSE வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.