பிரபல நடிகை மீது தீராத காதல்…. மூன்று வயது மூத்தவரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!
Author: Shree23 November 2023, 9:24 am
90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்திலும் மற்றும் டும் டும் டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் , ரன் , அன்பே சிவம் , ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று , விக்ரம் வேதா போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் மற்றும் இந்தியில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மாதவன் முதலில் நடித்த அலைபாயுதே திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால் அடுத்தது என்னவளே படத்தில் நடித்திருந்தார். அலைபாயுதே ஹிட் ஆன உடனே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து தயாரிப்பாளர்கள் மாதவனை புக் செய்தார்கள்.
அவரது அழகும், நடிப்பும் குறிப்பாக பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது. அலைபாயுதே திரைப்படம் வெளியான சமயத்தில் ஷாலினி – மாதவனின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. அப்படத்தை காண காதல் ஜோடிகள் திரையரங்கிற்கு படையெடுத்தார்கள். குறிப்பாக மாதவனின் அழகுக்கே பெண் ரசிகைகள் ஏராளமானோர் அவரை உருகி உருகி காதலித்ததுண்டு.
ஆனால், மாதவன் உருகி உருகி காதலித்த பெண் யார் தெரியுமா? பிரபல இந்தி நடிகையான ஜூஹி சாவ்லா தான். ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ள நடிகர் மாதவன், நான் Qayamat Se Qayamat Tak படத்தை பார்த்தபோது நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன்.
அவர் மீது தீராத க்ரஷ் இருந்ததை என் அம்மாவிடவும் கூறினேன். அன்று என்னுடைய ஒரே நோக்கம் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வது மட்டும் தான் என பலவருடத்திற்கு பின்னர் தன் காதல் கதையை கூறியுள்ளார். தற்போது நடிகர் மாதவன் நடிகை ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து ‘தி ரயில்வே மேன்’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.