சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்திற்கு போக முடிவெடுத்தேன்.. எமோஷனலான பார்த்திபன்..!
Author: Vignesh15 July 2024, 9:58 am
சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
மேலும் படிக்க: அப்படி போகனுமா?.. அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த இரண்டு பேர் கைது..!
இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வெள்ளி கிழமை ரிலீசான TEENZ படம் இந்தியன் படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனம் கிடைக்காத நிலையில், TEENZ படத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. தன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியாக ஒரு பதிவை பார்த்திபன் ட்விட்டரில் போட்டிருக்கிறார். இந்த படத்திற்கு, வரவேற்பு கிடைக்கவில்லை என்றால், சினிமாவை விட்டு விலகி கண்காணாத இடத்திற்கு சென்று விட முடிவு செய்திருந்தாராம் அவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்ட பதிவு,
மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!
Friends
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.
நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இவ்வாறு அவர் பதிவு செய்திருந்தார்.