நாங்க காருகுள்ள தான் குடும்பமே நடத்தினோம்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரின் மனைவி ஓபன் டாக்..!

Author: Vignesh
3 February 2024, 4:46 pm

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் என்றால் சிறகடிக்க ஆசையை சொல்லலாம். முத்து மீனாவை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

siragadikka aasai

தற்போது, இந்த கதையில் முத்து ரோகினியின் பார்லர் குறித்த உண்மையை தனது தந்தையிடம் கூறிவிடுகிறார். இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுந்தர்ராஜனின் மனைவி அளித்த பேட்டி ஒன்று தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sundar rajan

இவர், துர்கா என்ற டப்பிங் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபக், அசோக் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில், ஒருவர் 2004 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர்ராஜனின் மனைவி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் என்னுடைய கணவர் ஆரம்ப காலகட்டத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயங்களில் காரில் தான் குடும்பமே நடத்தினோம்.

sundar rajan

என் கணவர் ஓரிடத்தில் ஷூட்டிங்கில் இருப்பார். நான் ஓரிடத்தில ஷூட்டிங்கில், இருப்பேன். அப்போது, காரில் வந்து என்னை சந்திப்பார். நாங்கள் குடும்ப பிரச்சினைகள், அடுத்து என்ன செய்வது என்பதை காருக்குள் தான் பேசுவோம். மேலும், அவர் கூறுகையில், என் கணவர் எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுத்தது கிடையாது. அதை போல், அவர் கோபப்பட்டால் நான் சமாதானம் செய்வேன். நான் கோபம் அடைந்தால் அவர் சமாதானம் செய்வார். இந்த வயதிலும், நாங்கள் காதலித்து வருகிறோம் என சுந்தர்ராஜன் மனைவி துர்கா தெரிவித்துள்ளார்.

sundar rajan

முன்னதாக நடிகர் சுந்தர்ராஜன் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். இவர் கடைசியாக 2013ஆம் ஆண்டில் சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 411

    0

    0