முன்னணி இயக்குனருக்கு நேர்ந்த கதி; சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் சித்தி நடிகை,..

Author: Sudha
19 July 2024, 4:45 pm

வெயில், அங்காடித்தெரு, அரவான் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த பாலன். சமீபத்தில் கூட இவர் இயக்கிய அநீதி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ்காக ஜி5 ஓடிடி களத்திற்கு தலைமைச் செயலகம் என்ற வெப் சீரிஸை இயக்கினார்.

அந்த வெப் சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக ராடன் பிக்சர்ஸிலிருந்து வசந்த பாலனுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையாம். இந்த தொடரை வைத்து நன்றாக சம்பாதித்த போதிலும் இப்படி செய்துள்ளது அந்த நிறுவனம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு கோடிகளில் வாரிக் கொடுக்கும் தமிழ் சினிமா மறுபக்கம் சில சூப்பர் ஹிட் இயக்குனர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறது. சில இயக்குனர்கள் சம்பளம் விஷயத்தில் கறாராக இருப்பார்கள்.ஆனால் சில இயக்குனர்கள் அப்படி இருப்பதில்லை தங்களுக்கு வரவேண்டிய பணத்தை கேட்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள்.

வசந்தபாலன் கொடுத்த ஒரு பேட்டியில் தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கூட மிகவும் சிரமப் படுவதாக தனது கஷ்டத்தை தெரிவித்து இருந்தார். இப்படி சமீப காலமாக நலிவுற்று இருக்கும் வசந்த பாலனுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர் இயக்கிய படத்திற்கு சம்பளத்தையாவது கொடுத்திருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

  • Game Changer trailer release ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
  • Views: - 150

    0

    0