கிரிஞ்ச்.. வாந்தி வருது.. இதெல்லாம் ஒரு F***.. கோபத்தில் கொந்தளித்த ராதிகா..!
Author: Vignesh29 January 2024, 11:45 am
ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு , அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. நடிகை ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார். அத்துடன் இவர் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 100 – 120 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா சரத்குமார் ஒரு படம் பார்க்கிற போது யாருக்காக கிரிஞ்சா தோணி இருக்கா? இந்த படத்தை பார்க்கிறபோது வாமிட் வருகிற மாதிரி இருக்கு, இதெல்லாம் ஒரு Film ஆ என்று தெரிவித்து இருக்கிறார். இதனை பார்த்த பலர் netflix தளத்தில் வெளியான அனிமல் படத்தை தான் இவர் சொல்கிறார் என்று கூறுகின்றனர். இன்னும், சிலர் இவர் வீரசிம்மா படத்தை குறிப்பிடுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர்.
Have anyone cringed watching a movie? I wanted to throw up watching a particular movie????so so angry
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2024