நீ எங்க இருக்கனு பாரு?.. பிரபல நடிகரை திட்டி தீர்த்த ராதிகா..!

Author: Vignesh
22 May 2024, 1:48 pm
radhika sarathkumar
Quick Share

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

vadivelu

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.

vadivelu - updatenews360

மேலும் படிக்க: அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!

“என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான கிசுகிசுகளும், சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளது. அதையும் தாண்டி அவர் தொடர்ந்து பெரிய நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்து வருகிறார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் உடன் நடித்திருந்தார்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் வடிவேலு குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ஒரு மேடையில் பேசிய ராதிகா வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு முறை விமானத்தில் அவரை சந்தித்தேன்.

மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!

அப்போது, அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிய போது என் மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க என் அப்பவுடன் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான். ஆனால், அவரோ சிரித்துக்கொண்டு, அரசியல்வாதிகெல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை பா என்றார்.

vadivelu

இவர் வாழ்க்கை கொடுக்கிறாராம். இப்ப நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம். சரத்குமார், விஜயகாந்த், பிரபு இருந்தால் தைரியமாக நான் ஷூட்டிங் செல்வேன். ஏனெனில், அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஒரு பிரச்சனை என்றால், முன்னே வந்து நிற்பார்கள் என்று ராதிகா சரத்குமார் வடிவேலு மீது ஆத்திரத்தை கொட்டியுள்ளார்.

Views: - 82

0

0