நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு? தீராத வலி : துடிதுடித்து போன உயிர்.. வைரலாகும் பதிவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2025, 9:29 am

நடிகை ராதிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய நபர். தனது நடிப்பில் அத்தனை கலைஞர்களையம், ரசிகர்களின் மனதையும் வென்று விடுவார்.

ஏராளமான படங்களில் நடித்து வந்த் ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்பட்டது. விஜயகாந்த்துடனான காதல், பிராதாப் போத்தனுடன் திருமணம், அதைத்தொடர்ந்து வெளிநாட்டில் நடந்த திருமணம் என குறைந்த வருடத்தில் விமர்சனங்களை சந்தித்தார்.

பின்னர் நடிகர் சரத்குமாரை காதலித்தார். சரத்குமாரும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் ராதிகாவை திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமிக்கு ராதிகா ஏராளமான உதவிகளை செய்தார்.

சினிமாவில் வரலட்சுமி நடிக்க காரணமாக இருந்த ராதிகா, திருமணத்தையும் முன் நின்று நடத்தி வைத்தார். சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் ஒரு மகன் உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான், ராதிகா தீராத கால் வலியுடன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உயிர் போகும் அளவுக்கு வலி.

நிவாரணி மாத்திரைகள்,ஸ்ப்ரே என பயன்படுத்தி வந்த அவருக்கு வலி குறையவே இல்லை. 2 படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் என்பதால் வலியுடு நடித்து முடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அப்போது ராதிகாவின் தோழி, நீங்கள் அறுவை சிகிச்சை செய்ததற்கும், படங்களை முடித்து கொடுத்ததற்கும் நன்றி சொல்வார்கள் என நம்புவதாக கூறினார்.

ஆனால் ராதிகாவோ, நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, எனது கவனம் வேலையில் மட்டும்தான் உள்ளது, பெண்கள் தங்களை நேசித்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்த மகளிர் தினத்தில் விரும்புகிறேன்,

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் என்னை என் கணவர் குழந்தை போல் கவனித்து கொண்டதாகவும், அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள், வலிமையாக இருங்கள் என கூறியுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?